பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

2O7

வாக, மனநோயால் பீடிக்கப்படுகிறவர்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படுவது தூக்க மாத்திரைதான். எனது உறவுக்கார இளைஞனுக்கு மனநோய் முற்றிவிட்டது. அவனது உறவினர்கள் என்னை அணுகினார்கள். உடனே நான், மனநோய் சிகிச்சையில் பிரபலமாக விளங்கும் டாக்டர் பாப்பா குமாரிக்கு, டெலிபோன் செய்தேன். தனியார் மருத்துவமனைக்கு வரும்படி கூறினார். மறுநாள் அந்த மருத்துவமனைக்கு அவனை கூட்டிக்கொண்டு போனேன். அவனோ விஷயத்தை யூகித்துக் கொண்டு, “அண்ணாச்சி எனக்கு பைத்தியமுன்னு நினைக்கிற உங்களுக்குத்தான் பைத்தியம், வேணுமின்னா பாருங்க... டாக்டரு, உங்களுக்குத்தான் பைத்தியமுன்னு, மருந்து கொடுக்க போறாங்க” என்று சொல்லிவிட்டு அட்டகாசமாகச் சிரித்தான். நான், அவனை உறவினர்களை வைத்து சமாளித்தேன். மருத்துவமனைக்கு டாக்டர் பாப்பா குமாரி அப்போது வரவில்லை. அந்த மருத்துவமனையில் மனநோய் அல்லாத, மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்கள். ஒரு பெண் டாக்டர், பல நோயாளிகளுக்கு நோய்களுக்கு தக்கபடி மருந்துகளை கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு தொண்டை வலி இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அந்த டாக்டர் அம்மாவை அணுகி, நான் பாப்பா குமாரியை பார்க்க வந்திருப்பதாக சுருக்கமாய் சொல்லி விட்டு, தொண்டை வலிக்கு மருந்து தரும்படி கேட்டுக் கொண்டேன். உடனே அந்தம்மா, என்னை ஏடாகோடமாகப் பார்த்துவிட்டு “எது பேசணுமுன்னாலும் பாப்பா குமாரி வந்த பிறகு பேசுங்க” என்றார் உடனே, நான் அலறி அடித்து “எனக்கு ஒன்னும்