பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

சு. சமுத்திரம் ☐

அப்படி இல்லேம்மா” என்றேன். அந்தம்மாவோ, அனுதாபமாக என்னைப் பார்த்தபடியே, “டாக்டர் பாப்பா குமாரியை பார்க்க வருகிற எல்லாருமே இப்படித்தான் உளறுவாங்க” என்றார். பக்கத்தில் இருந்த அந்த உறவுக்காரப் பையனோ “பாத்தீங்களா அண்ணாச்சி, நான் நினைச்சது சரியா போயிட்டது பாருங்க” என்று அட்டகாசமாகச் சிரித்தான். உடனே நான் அவன் ஒரு ஞானவானாக இருப்பானோ என்று கூட ஆச்சிரியப்பட்டேன்.

இந்த நிகழ்ச்சி கடற்கரையில் உட்கார்ந்திருந்த எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. ஞானத்திற்கும் பைத்தியத்திற்கும் நூல் இழை தான் வித்தியாசம் என்ற ஒரு பழமொழியும் நினைவிற்கு வந்தது. கதை கிடைத்து விட்டது. இந்த பின்னணியில் தூக்கத்தை ஒரு நடுத்தர வயதுக்காரர் ஒரு நாள் இரவு திடுதிப்பென்று வெறுப்பதாகவும், அன்று பகலில், நடந்த நல்லது, கெட்டதுமான அனுபவங்களை அவர், நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன். ஞானத்திற்கும், பைத்தியத்திற்கு கடந்தகால வாழ்க்கையும் ஒரு காரணமல்லவா? ஆகையால் தாயில்லாக் குழந்தையான அவரது இளமைக் கால துயர அனுபவங்களையும், அதே சமயம், அவரது சாதனைகளையும் ஒரு சேர கோடி காட்டினேன். அவரை திட்டுகிறவர்களையும் சுருக்கமாக விவரித்தேன். அவருக்கு யேகாமுறை ஒரளவிற்கு அரைகுறையாகத் தெரியும் என்பதையும் விளக்கினேன். (இரவில் நானும் ஒரு வித யோகமுறையைக் கையாளுகிறேன்).

இறுதியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட