பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

209

அவரை அவருக்கு பரிச்சியமான ஒரு சாமியார் விபூதியோடும், டாக்டர் ஊசியோடும் நெருங்குவதை குறிப்பிட்டு கதையை முடித்து, முடிவை வாசகர்களிடம் விட்டுவிட்டேன். இது எனக்கு மிகவும் பிடித்தகதை.

பெண் என்றால் பெண்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, வர்த்தகத்திற்கும், இலக்கியத்திற்கும் இடைப்பட்ட நிலைக்களத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் வாசுகி பத்திரிக்கையில் குடியும், குடித்தனமும் என்ற எனது சிறுகதை ஒன்று அண்மையில் வெளியானது. இது வழக்கம் போல் முழுக்க முழுக்க ஒரு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. எனது உறவினர் ஒருவர் உறவுக்காரருக்கே உரிய இலக்கணப்படி நடக்காமல் என்னுடன் அன்பாகப் பழகுபவர். ஊரில் எப்படியோ குடிப்பழக்கம் ஏற்பட்டு இருந்த சொத்தையெல்லாம் சிதைத்து விட்டவர். பிறகு மனம் திருந்திக் குடியை விட்டாலும் நொடித்துப் போன குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. அவரது மனைவியும் எனக்கு உறவுக்கார பெண். ஆகையால் இருவரையும் சென்னைக்குக் கொண்டு வந்து தங்க வைத்தேன். பிறகு சென்னைத் தொலைபேசி வாங்கிக் கொடுத்தேன். ஒரு பேன்சி கடையையும் ஏற்பாடு செய்தேன். மீண்டும் குடிக்கக் கூடாது என்றும் அப்படிக் குடித்தால் தொலைபேசி துண்டிக்கப்படும் என்றும் ஒளிவு, மறைவு இல்லாமல், கண்டிப்புடன் சொல்லி வைத்தேன். இதற்குப் பிறகு நானே கடன் கேட்கும் அளவிற்கு மாதம் இரண்டாயிரத்துக்கு மேல் வருமானம் வந்தது. 400 ரூபாயில்