பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

211

ரோஷமே வராது. அதனால்தான் நானே குடிக்கச் சொன்னேன். இனிமே குடிக்காம பார்த்துக்கறதுக்கு நானாச்சு” என்றாள்.

இதையே ‘குடியும் - குடித்தனமும்’ என்று எழுதினேன். தமிழக அரசு திரு.ஜி.வி. -யை வைத்து எடுக்கும் மதுவிலக்கு பிரச்சாரப் படத்தில் குடியால் இருதயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மேல்நாட்டில் சிகிச்சை அளிப்பதாக பல காட்சிகள் வருவாதகவும் அவற்றை படமாக்க படப்பிடிப்புக்குழு மேல்நாடு போகப்போவதாகவும் கேள்விப்பட்டேன். அதாவது நமது அரசுக்கு மேல் குடிமக்களே கண்ணில் படுகிறது. கதையின் முடிவில் இதைக் குறிப்பிட்டு விட்டு அந்த மதுவிலக்கு கமிட்டி எந்த உலகத்தில் இருக்கிறது என்று ஒரு வினாவை எழுப்பினேன். ஆனாலும் இந்தக் கதையை பிரச்சாரமாக கருதிவிடக் கூடாது என்று அப்படி எழுதியதை அடித்துவிட்டேன்.