பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


19
வாடாமல்லி நாவலின் வரலாறு


ல ஆண்டுகளுக்கு முன்பு கடலூருக்கு போயிருந்த போது - அப்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியான திரு.சுபாஷ் அதன் அருகாமையிலுள்ள ஒரு கடலோர கிராமத்திற்கு கூட்டிச் சென்றார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆயிரக்கணக்கான அலிகள் குழுமியிருந்தார்கள். அருகே இருந்த பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்டுதோறும் இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலுக்கு நாடெங்கிலுமிருந்து அலிகள் வருவதுண்டு. இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த கோவிலில் தங்களது கணவர் என்று இவர்கள் கருதும் கூத்தாண்டவருக்குச் சேவை செய்ய வருபவர்கள். முதல் நாள் கூத்தாண்டவருக்கு தங்களை அசல் திருமணப் பெண்களாக ஜோடித்துக் கொண்டு பூசாரி மூலம் தாலி கட்டி மனைவி ஆவார்கள். பிறகு நான்கு நாள் கழித்து