பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

215

துரத்தப்பட்ட பல்வேறு அலிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களின் கதையைக் கேட்டால் கண்ணீர் வந்துவிடும், பல வசதி படைத்த பெற்றோர்கள் கூட இப்போதும் அந்தப் பக்கமாக வந்து தூக்கி எறியப்பட்ட தத்தம் செல்வங்களின் கைகளைப் பிடித்து கண்ணீர் மல்கி கதறுவார்களாம். அந்தப் பக்கத்துச் சேரியில் வாழும் இவர்கள் அந்தப் பக்கத்துச் சேரிக்காரர்களோடு இரண்டறக் கலந்தவர்கள்.

அலித் தொழில்

இரவு நேரங்களில் மரங்களோடு மரங்களாக நின்று காரில், இரண்டு சக்கர வாகனங்களில் நிற்பவர்களை வாடிக்கையாக அழைப்பதே இவர்களது தொழில். கையும்களவுமாக இவர்கள் பிடிபடும்போது, காவல்துறையினர் நையப்புடைத்து விடுகிறார்களாம். அதோடு, கஞ்சா கடத்தியதாக வழக்குப் போடுகிறார்களாம். குருவக்கா, என்னிடம் “நாங்க விபச்சாரம் செய்யுறதா வழக்குப் போடுங்க சார் அப்பவாவது எங்களோட நிலமை ஜட்ஜுக்குத் தெரியட்டும். நாங்க இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? மார்க்கட்ல கடை போட்டா, பொட்ட பொட்ட என்கிறாங்க. வீட்டு வேலைக்கு யாரும் சேர்க்கிறது கிடையாது. கவிர்மெண்ட்லயும் வேலை இல்லை. எங்களுக்கும் வயிறு இருக்கே. இதைத் தவிர வேறு பொழைப்பு இல்லையே” என்று காவல்துறையிடம் அடிக்கடி சொல்வதாகவும் அவர்கள் இவர்களைக் கஞ்சியாகவும், கஞ்சாவாகவும் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் குறைபட்டாள். “எல்லோருக்கும் ஏதோ ஒரு சங்கம் இருக்கிறது எங்களுக்கு என்ன இருக்கிறது. நாதியில்