☐ எனது கதைகளின் கதைகள்
217
கவோ, பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறுகிற வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. கருவிலேயே அலிகளாகி கருகிப் போனவர்கள். குரோமோசம்கள் பழுதடைந்ததால் பழுதுபட்டுப் பிறந்தவர்கள். இவர்களை சமூகம் இன்னும் கேலியும் கிண்டலுமாய் பார்த்து வருவது கண்டனத்திற்குரியது. ஆனாலும், வடநாட்டு அலிகள், சிறிது மதிக்கப்படுகிறார்கள். நல்லது கெட்டதுக்கு மக்கள் அவர்களுடைய உதவியை நாடுகிறார்கள். விகடனில் வெளியான ‘வாடாமல்லி’ வாசகர்க ளின் மனசாட்சியை உலுக்கியது. இதனால் என் எழுத்தின் நோக்கம் நிறைவடையவில்லை என்றாலும், அதன் எல்லையை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
குறிப்பு : அண்மையில் திருப்பூரில் முற்போக்கு படைப்பாளி சுப்பிர பாரதிமணியன் முயற்சியில் சேவை நிறுவனம், கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் வாடாமல்லி விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இலக்கிய மோதல்களில் எனக்கு எதிர்ப்பக்கம் நின்ற கோவை ஞானி அவர்கள் இந்த நாவலைப் பாராட்டினார். எனது நாவல் வணக்கத்திற்குரியது என்றும் தெரிவித்தார். என்னோடு பத்திரிகைகளில் மோதினாலும் தனது ஆய்வு நூலில் எனக்குரிய இடத்தைத் தனது பாணியில் கொடுத்தவர். இவருடன் இடதுசாரி தோழர்களான பழனிச்சாமி, பொன்னுச்சாமி, அலோசியஸ், எஸ். ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோர் என் படைப்புகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்தார்கள்.