பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சு. சமுத்திரம் ☐

நண்பர், “நானும் கிராமியத்தை” எழுதுகிறேன் என்று சொன்னபோது, ‘ஆனாலும் சமுத்திரம் மாதிரி எழுதமுடியாது’ என்று பதிலளித்தார். அந்த உரிமையில் வானொலி நிலையத்தில் அவரைப் பார்த்தபோது இப்படிச் சொன்னேன்: “சுஜாதா சார்! நீங்கள் போட்ட ஒரு சில வார்த்தைகளில் தவறில்லை. ஆனால் ஒரு பனை ஏறி, மனைவியின் மார்புத்துணியை வெள்ளைக்காரன் வாளால் விலக்குவது போலவும், அதை அந்தப் பனை ஏறி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் எழுதுனிங்க-பனை ஏறி போன்ற பாட்டாளிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து தன்மானம் தான். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஆயுதம் பாளை அறுவாள். அந்தத் தொடர்கதையில் நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை உங்களை அறியாமலேயே கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறேன்.”

ஆனாலும், சுஜாதாவிற்கு நான் பேசியது பிடிக்கவில்லை என்பதை அவரது முகம் சொன்னது. “மாடசாமி, பின்னால் கதாநாயகனாகப் போகிறான் என்பதற்குப் பிண்ணணியாக இதை எழுதினேன். இது கிளை மாக்ஸிற்கு உதவும்” என்றார். அவர் நாடார் சாதியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தத் தொடர்கதையை எழுதவில்லை. எப்படியோ அவருக்கு எதிராக நாடார் சாதியினரைத் தூண்டிவிட்ட நாடார் எழுத்தாளர்களில், நானும் ஒருவன் என்பதுபோல் பத்திரிகை உலகில் அப்போது பேச்சு அடிபட்டது. பல்வேறு நாடார் அமைப்புகளில் என்னை பலர் தாக்கிப் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு சில நாடார் அமைப்புகள் என்னை பேச வரும்படியும்