பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சு. சமுத்திரம் ☐

அன்பில்லாத அண்ணனுக்கு

இதே மாதிரி இன்னொரு சுயவிமர்சனக் கதையையும் எழுதினேன். என்னைப் படிக்க வைத்த எனது சித்தப்பா இறந்துவிட்டார். எனது சித்தியும், பிள்ளைகளும் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து விட்டார்கள். மாதச் சம்பளம் வாங்கும் என்னால், அதிகமாக உதவ முடியவில்லை. என் சித்தியும், என்னிடமிருந்து அன்பைத்தான் எதிர்ப்பார்த்தாளே தவிர, பணத்தை அல்ல. ஆனாலும் சித்தப்பா மகள் ஒருத்தி வயதுக்கு வந்து விட்டாள். அவளுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பொருளாதாரச் சக்தி எனக்கில்லை. எப்படியோ அவளுக்கு ஒரு திருமணமும் முடிவாகி, எனக்கு அழைப்பிதழ் வந்தது. நான் அந்த அழைப்பிதழைக் காட்டியே ஜி பி எப் லோன் போடப்போனேன. நம்மால் திருமணத்திற்கு உதவ முடியவில்லை, என்றாலும் அந்த அழைப்பிதழையே மூலதனமாக்குறோமே என்று எழுதிய விண்ணப்பத்தை கிழித்துப் போட்டேன். அந்த குற்ற உணர்வில், ‘குமுதத்தி’ல் “அன்பில்லாத அண்ணனுக்கு” என்ற சிறுகதை எழுதினேன்.

ஊர்க்காரர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி. நான் அவர்களைப் பற்றி மட்டுமல்ல, என்னைப் பற்றியும் எழுதுவதால், என்னிடம் எந்தவித பாரபட்சமும் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

எந்தன்றி கொன்றார்க்கும்

எங்கள் ஊரில் ஒருவர் அந்தக் காலத்திலேயே சப் இன்ஸ்பெக்டரானார். அவரது குடும்பத்தாருக்கோ பெருமை பிடிபடவில்லை. ஊருக்கு அம்மன்