பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சு. சமுத்திரம்

வருகிறது. வெளியூரில் சொந்தக்காரர்களின் திருமண நிகழ்ச்சிகள் போன்ற விழாக்களில், கலந்து கொள்ளும் போது, எனக்கு இரவல் சட்டை வாங்கி இடுப்பில் தூக்கி வைத்துச் சென்றதும் இப்போது கூட, அழுத்தமாக நெஞ்சில் நெருடுகிறது. நான், அம்மாவோடுதான் தூங்குவேன். என் தாய் அதிகாலையில் வயலுக்குப் போய்விட்டு, இரவில்தான் வருவாள். அதுவரைக்கும், நான் நிலா வெளிச்சத்தில் கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை, இதர தெரு வீரர்களுடன் விளையாடியது ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம், என் தாய் வயலிலிருந்து வந்த வேகத்திலேயே, என் விருப்பத்திற்கு விரோதமாக என்னைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாள். ஒருநாள், என் தாய் வெளியூரில் எனது பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள். சாயங்காலம் திரும்ப வேண்டியவள், திரும்பவில்லை. மறுநாள் காலையிலும் வந்தபாடில்லை. உடனே நான் ஒரு வாதமடக்கி மரத்தில் ஏறி, அம்மா வரும் திசையை நோக்கி, கண்களைச் செலுத்தினேன். சிறிது நேரத்திற்குள், அம்மா அங்குமிங்குமாய் உட்கார்ந்து உட்கார்ந்து வருவது தெரிந்தது. அந்தக் கருப்புச்சேலை, அம்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது. ஒருவேளை அம்மாவாக அல்லாமல் இருக்கலாம் என்று நான் மரத்திலேயே இருந்துவிட்டு, சிறிது நேரம் கழித்து இறங்கினேன். என் அம்மா வேகவேகமாக வந்து, வீட்டுத் திண்ணையில் படுத்தாள். உடனே வாந்தியும், பேதியுமாக வந்தது. என் தாத்தா, அம்மாவின் நாடியைப் பார்த்த விட்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதார். ஊரே கூடிவிட்டது. அம்மாவின் கண்கள், என் மீதே நிலைத்