பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சு. சமுத்திரம் ☐

நல்லா கேட்டே ஒரு கேள்வி

1960களின் முதல் பகுதியில் சென்னையில் கல்லூரியில் படித்து வந்தேன். நான் இருந்த வீடு சேரிப்பகுதி. இருபது வீடுகளைக் கொண்ட காம்பவுண்ட் வீடு. ஒவ்வொரு அறையும், சின்ன சின்ன நரக அறைகள். உள்ளே படுத்தால், புழுக்கம்; மூட்டைப் பூச்சி; வெளியே படுத்தாலோ, கொசுக்கடி. நான் தங்கியிருந்த படித்த எனது சித்தப்பா வீடும், நாலடி குச்சு மாதிரி. ஓலைக்குப் பதிலாக ஓடு போட்டிருந்தது. அவ்வளவுதான். கிராமத்தில் கம்மாக்கரையில் சுற்றி, வயல்பரப்புகளில் நடந்து, வாலிபால் விளையாடி, விசாலமாகத் திரிந்த என்னை ஜெயிலில் போட்டதுபோல் இருந்தது. எப்படியும், பட்டப் படிப்பை முடித்து விட வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்தில் பத்துப்பேர் கொண்ட அந்தச் சின்ன வீட்டிற்குள் நானும் நடமாடினேன். அதே சமயம் அங்கேயிருந்த சுமார் ஐம்பது பேரைக்கொண்ட மனித சமூகம், என்னைப் பெரிதும் வசீகரித்தது. ரிக்க்ஷா ஓட்டுபவர்கள், துறைமுகத்தில் கூலி வேலை பார்ப்பவர்கள், அப்பளம் சுடும் பெண்கள், வடை சுடும் ஆயா-இவர்களின் மாசுமருவற்ற அன்பு, எனது மனக் கஷ்டத்தை மறக்கச் செய்தது. இந்த ஐம்பது பேருக்கு இருந்தது, ஒரே ஒரு டாய்லட், அதுவும் கதவு இல்லாதது. “யாரு உள்ளே” என்று கேட்டுக் கொண்டே ஒருவர் போக வேண்டும். குளிப்பதோ, குழாயடிப்பக்கம். நான் குழாயில் இறங்கி தவலையில் தண்ணீர் பிடித்து டிரம்மை நிரப்பி, குளிக்க வேண்டும். ஜட்டியோடோ, துண்டோடோ, அத்தனை பேருக்கும் முன்னிலையில் ஐந்தரை அடி உடம்பை முக்கால்