பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

59

‘இஸ்துகின்னு’ போன அந்தக் காலத்து வாலிபனும், இந்தக் காலத்துக் கிழவனுமான இரண்டாவது கணவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றாளாம். இதற்கு மகள்காரி மறுத்துவிட்டாள். ஆனால் அந்த மூதாட்டியோ, “ஒரு காலத்தில் என்னைக் கூட்டிக் கிட்டு போய் வாழ வைத்தவன் வகைதொகை இல்லாமல் கிடக்கும் போது நான் மட்டும் வர்றது இன்னா நியாயம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாளாம். எனக்கு கண்கள் கலங்கின. பெற்ற மகளையும், கைபிடித்த கணவனையும் விட்டுவிட்டுப் போன அந்தப் பெண், தன்னை இஸ்துகின்னு போன ஒருவனை கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதில், காட்டிய அக்கறை அவளை கண்ணகிக்குச் சமமாக எண்ண வைத்தது. இதை வைத்து, குங்குமத்தில் ஒரு சிறுகதை எழுதினேன்.

இடம் தேடி....

நான் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளில் எனக்குப் பிடித்த பத்துக் கதைகளைச் சொல்லச் சொன்னால், அதில் “இடம் தேடி” என்ற சிறுகதை முன்னணியில் நிற்கும். இது குமுதத்தில் எழுதப்பட்ட கதை, சென்னைத் தொலைக்காட்சியில் பிரபல மக்கள் இயக்குனர் அருண்மொழியால் இயக்கப்பட்டு நல்ல பேர் வாங்கிய நாடகம். இதுவும், எனது அனுபவ அடிப்படையில் எழுந்தது. எனது பெரியப்பா ஒருவர் எங்கள் ஊரில், தலைவர் போல வாழ்ந்தவர். ஏதாவது ஒரு வீட்டில் ஒருவர் மரணமடைந்து விட்டால், அங்கு இவர் போகும் போது எல்லோரும் இவரிடமே ஆறுதல் கேட்பார்கள். திருமணம் என்று வந்துவிட்டால், மாப்