பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சு. சமுத்திரம் ☐

பிள்ளைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் இவர் தான். தலையிலே குடுமியோடு, செக்கச்சிவந்த நிறத்தோடு பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். ஊரில் பெரிய வழக்காளி; அப்படிப்பட்ட பெரியப்பா, பஞ்சம் பிழைப்பதற்காக, எல்லோரையும் போல சென்னைக்கு வந்தார். எட்டுப் பிள்ளைகள். அத்தனை பேரும் ஆண்கள்; ஆனாலும் பெரிதாக யாரும் முன்னேற முடியாத சூழல். எப்படியோ நான்கைந்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இறுதிக் காலத்தில் நோய்ப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஓரளவு குணமாகி, மகன்கள் வீட்டிற்குத் திரும்பி வந்தார். மருமகள்கள் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இறுதியில் உறவினர் வீட்டில் அவர் அடைக்கலம் தேட வேண்டியதாக இருந்தது. இந்தப் பெரியப்பாவை, ஒரு பெண்ணாக மாற்றி, சிறுகதை எழுதினேன். அப்போது ஓரளவு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கதை. இலக்கியப் பண்டிதர்கள் தவிர, மற்றவர்கள் இதைப் படித்து விட்டு, அழாமல் இருக்க முடியாது. இன்னும் பெரியப்பாவின் உருவமும், இறுதிக்காலத்தில் அவர் பட்டபாடும், என் நெஞ்சிலேயே இருக்கிறது.

ஒரு நோயின் அறிகுறி

மீண்டும் எனது குரு ரெங்கசாமி செட்டியார் விவகாரத்திற்கே வருவோம். அவருக்கு ஒரு மகன். அசல் ரவுடி; ஆனால் கேடியல்ல. இவருக்கு வடசென்னையில் அப்போது கொடி கட்டிப் பறந்த ஒரு அரசியல் பிரமுகர் தூரத்து உறவினர். செட்டியாரிடம்