பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

65

இவர்கள் லும்பன்கள்; இப்படித்தான் இருப்பார்கள் என்பார். இப்படி அவரிடம் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் தத்துவார்த்த ரீதியான நட்பானது. கல்லூரியின் பொருளாதார பாடத்தில் “கார்ல் மார்க்ஸ் சொல்வது தவறு. இருபது ரூபாய் புத்தகமும், இருபது ரூபாய் செருப்பும் சமமாகுமா” என்று ஒரு உருப்படாத கிரிட்டிலிஸம் வரும். இன்னும் அப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இத்தகைய பொருளாதார மாணவனான எனக்கு, அந்தத் தையல் தொழிலாளி பாட்டாளி வர்க்கத்தைப் பற்றியும், முதலாளித்துவ வர்க்கத்தில் உள்ள போலித்தனமாக மரபுகள் பற்றியும், விவரமாக எடுத்துரைத்தார். இது எனக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. பி.யு.சி. படிக்கும்போது, என்னைச் சென்னை நகர மாணவர்கள் “அண்ணாச்சி” என்று கிண்டல் செய்வார்கள். என்னுடைய நிறமும், போக்கும், ஆடையும் அவர்களுக்கு நேரப்போக்காக இருந்ததை அறிந்தேன். இதனால் கூனிக்குறுகிப் போனேன். கல்லூரியில் குளிரில் கூட உடம்பு வேர்த்தது. ஆனால் இந்தத் தையல் தொழிலாளரின் பரிச்சயம் ஏற்பட்ட பிறகு, பாட்டாளி மக்களின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும், எப்படி முதலாளித்துவ வர்க்கத்தாலும் பூர்ஷ்வாக்களாலும் ஏளனத்துக்குரியதாகவும், அடக்கி வைக்கப்படுவதற்குரியதாகவும் ஆகிறது என்பதை அறிந்து தெளிந்தேன். இதனால் என்னைக் கிண்டல் செய்த மாணவர்களை துச்சமாக மதிக்கக் கற்றுக் கொண்டேன். அவர்களிடத்தில் அவர்களின் நலிவுற்ற கலாசாரத்தையும், சொல்லத் துவங்கினேன். இதன் விளைவு, நான் தலைவனாகி விட்டேன். கல்லூரியில் வேலைநிறுத்தத்திற்குத் தவிர்க்க முடியாத