பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

67

அவளைத் தள்ளி வைத்துவிட்டான். இவள், கூலி வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிப்பாள். ஐந்தாறுமாதம் கழித்து நாடு திரும்பிய காட்டு விக்கிரமாதித்தன் போல் அவள் கணவன் காட்டான் வருவான். பேண்ட் சட்டையோடு கிருதா மீசையோடும் இருக்கும் கணவனைப், பார்த்து. இந்த அப்பாவிப் பெண் மயங்கிவிடுவாள். அவனும் அவள் பணத்திலேயே ஒருவாரகாலம் அவளிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, முடிந்தால் அவளுடைய நகை நட்டுகளையும் எடுத்துக்கொண்டு போய்விடுவான். இவள் குமுறிக்குமுறி அழுவாள். அவனைக் கண்டபடி திட்டுவாள். இனிமேல் அவனைச் சேர்க்க மாட்டேன் என்று சபதமிடுவாள். பிரசவ கால சபதம்தான். என்னால் தாள முடியவில்லை. இப்படி அவன் அவளை ஏமாற்றிய பிறகு, அந்த அக்காளிடம் போய் “இப்படி ஏமாறலாமா?” என்று கேட்டால் அதற்கு அவள் அளித்த பதில் எனக்கு வியப்பைக் கொடுத்தது.

“நீ சொல்றது நியாயம்தான் நயினா... ஆனா காட்டி ஒண்னு சொல்றேன் கேளு சினிமா பாக்கோம். அதிலே வரது வெறும் கததான்னு தெரியும். ஆனாலும், அந்தச் சமயத்தில அத நெசமா நம்பி அயுவுறோம், சிரிக்கிறோம். இதுபோல அந்தக் கசமாலம் காசுக்காவ என்னெ ஏமாத்தறான்னு எனக்கே தெரியும். ஆனாலும், அவன் பேசற அந்தச் சமயத்தில் சினிமாவுல நம்ம மறக்கிறதுமாதிரி மறந்துடறேன். இன்னொன்று இந்தத் தடவையாவது அந்தக் கம்மனாட்டி நெசமாவே இருப்பான்னு அக்காவுக்கு ஒரு ஆசெ.”

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பெண், ஏங்கி