பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

69

போனான். அந்தக் குழந்தை தனக்கு ஒருவேளை பிறந்திருக்காது என்பது தெரிந்தாலும், அவனுக்கு அந்தக் குழந்தையைவிட மனமில்லை. கூட்டிக் கொண்டு வந்து விட்டான். இப்படிப்பட்ட ஒரு தந்தை, தந்தையின் தந்தையான கடவுளுக்கு சமம் போல் தோன்றியது. ஒரு அப்பாவி மனிதன் - ஆனாலும் தனக்குப் பிறக்காத அந்தக் குழந்தை மீது அப்படி அன்பைப் பொழிந்தான். இத்தகைய நிகழ்ச்சிகளை இப்போது நினைக்கும் போதெல்லாம் இவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது. இதை வைத்து குமுதத்தில் ‘பூவம்மாவின் குழந்தை’ என்ற ஒன்று பிறந்தது.

குறிப்பு:

1. சாமுத்திரிகா லட்சணத்தில் இப்போது எனக்கு நம்பிக்கை கிடையாது. சப்பை முக்குக்காரர்கள் திறமையற்றவர்கள் என்றால் ஜப்பான்காரன் நம்மைப் பார்த்துச் சிரிப்பான்.

2. வளர்ப்பு மகள் நாவல் பல்வேறு பதிப்புகளைக் கண்டது. பல பல்கலைக்கழகங்களிலும், மத்திய மேல்நிலைப் பள்ளிகளிலும், பாடநூலாகப் பயன்பட்டது. டாக்டர் சாலை இளந்திரயன் அவர்கள்தான் முதன் முதலில் மேல்நிலைப் பள்ளியில் இதைப் பாடநூலாகக் காரணமானவர்.