பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சு. சமுத்திரம் ☐

எப்படி என்கிறீர்களா... அவர் செய்தி ஆசிரியராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார்... கூடுதல் என்ற வார்த்தை எடுக்கப்பட்டுவிட்டது. இந்த வார்த்தைக்குள் அதிகாரிகள் விளையாடி விட்டார்கள்... இது தாயில் பிரசுரமாயிற்று.

அதாவது ஊழல் அதிகாரியை கூடுதல் ஆசிரியராக நியமிக்கலாமா என்ற கேள்விக்கு நியமிக்கவில்லை என்ற பதில்; செய்தி ஆசிரியராகத்தான் நியமித்தோம். கூடுதல் ஆசிரியராக நியமிக்கவில்லை, என்று நியாயமாகச் சொல்ல வேண்டிய பதிலை, “இல்லை” என்று சாமர்த்தியமாக முடித்து விட்டார்கள். ஒரு வேளை அந்த உறுப்பினர் திருப்பிக்கேட்டால் நீங்கள் கேட்டது கூடுதல் செய்தியாசிரியர் நியமனம் பற்றி; செய்தி ஆசிரியர் நியமனம் பற்றி அல்ல என்று சொல்லிவிடலாம். இப்படி வார்த்தைகளுக்குள்ளேயே விளையாடி, பார்லிமென்ட் உறுப்பினரின் கேள்வி அடிபட்டுப் போனது. யாரோ சொல்லிக் கேட்ட அந்த உறுப்பினரும், மீண்டும் அந்தக் கேள்வியை வற்புறுத்த மாட்டார் என்பது அந்த அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து பண்டாரத்தைக் கொண்டு வந்தேன். கூடுதல் ஆசிரியராக நியமிக்கவில்லை என்றாலும், ஆசிரியராக நியமித்திருக்கும் போது இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று மேல் அதிகாரியான டைரக்டர், கேட்கும் போது பண்டாரமோ “மாண்புமிகு” உறுப்பினர்கள் மிகப் பெரிய மனிதர்கள். நாம் அவர்களுக்கு வேலைக்காரர்கள் மாதிரி; ஆகையால் பெரியவர்கள் கேள்விக்கு உண்டு