பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சு. சமுத்திரம்

தார்கள். ஒருவன் அடிப்பதற்கு கையை ஓங்கிவிட்டான்.

நான் வெலவெலத்துப் போனேன். என்னுடைய பப்ளிசிட்டி ஆபீசர், உதவியாளர், ஆகியோர் முன்னிலையில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக வருந்தினேன். எனது கன்னட உதவியாளர்களும், பேசமுடியாமல் நின்றார்களே தவிர, எனக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. ஒரு வேளை விவகாரம் விபரீதமாக வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். என்னை அவசர அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப் போனார்கள். ஆனால், நானோ எதிர்ப்புக் குரல் காட்டி நின்றேன். உடனே ஒரு ஆசாமி கொஞ்சு தமிழில் “நாங்களும் அப்போது பார்த்தே உன்னைக் கவனிக்கிறோம். நீ என்னடான்னா கூர்க்கு பெண்கள் ரொம்ப அழகா இருக்காங்கன்னு சொல்றே. அவங்கள உத்து உத்து பாக்கறே. ஜாக்கிரத! அவளுங்க ஒவ்வொருத்தி கிட்டயும் துப்பாக்கி இருக்கு. ஒரு புல்லட்டுல்ல நீ போயிடுவே” - இந்த “தண்ணி” ஆசாமியைத் தொடர்ந்து, பலரும் என்னை மொய்த்துக் கொண்டார்கள். நல்லவேளையாக, அந்தப் பக்கமாக வந்த ஒரு கூர்க்கு ஆசாமி, ஏதோ கூர்க்கு மொழியில் சொன்னார். உடனே என்னைத் திட்டியவர்கள் பெட்டிப்பாம்பாகி, மன்னிப்புக் கேட்டார்கள். வந்தவர், நான் கர்நாடக மாநில விளம்பர அதிகாரி என்றும் கூர்க்கு பகுதிகளில் திரைப்படங்களைக் காட்டுவதற்காக வந்திருக்கிறேன் என்றும், சொல்லியிருக்கிறார். உடனே என்னை எந்த வேகத்தில் திட்டினார்களோ, அந்த வேகத்தில் நண்பர்க