பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

87

றில், அவள் கணவனை, கணவனின் தம்பி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டானாம். ஊர்காரர்களோ பாராமுகமாக இருந்ததுடன், கொலைகாரன் தப்பிக்கும் வகையில் விவகாரத்தை பூசிமெழுகி விட்டார்களாம். இதுவும் போதாது என்று ஊர்க்காரர்களோ அவளை உதாசீனம் செய்துவிட்டு, கொலைகாரனையே, கொலையுண்டவனின் ஈமச்சடங்கை நிறைவேற்றச் சொன்னார்களாம். அவள் சொல்லிச் சொல்லி அழுதாள். கணவனைக் கொன்றவனை ஒரே வீட்டில் தினமும் பார்க்கும் அவல நிலையை நினைத்து தினமும் அழுவதாகக் கூறினாள். நான் அவளுக்கு ஆறுதல் சொன்னேன். ஆண்டவன் பொறுப்பில், தன்னை ஒப்படைத்து விடும்படி தேற்றினேன். குழந்தைகளை வளர்ப்பதில் தீவிரமாக இருக்கும்படி எடுத்துச் சொன்னேன். எவருமே இந்த உலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பதை நினைத்து, இருக்கிற காலத்தை பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நல்லவிதமாய் கழிக்கும்படி சொன்னேன். உடனே அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவள் முகத்தில் லேசான தெளிவு தெரிந்தது. ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். பிரியும் வேளை வந்தது. இனிமேல் நாங்கள் மீண்டும் சந்திக்கப் போவதில்லை என்பது அவளுக்கும் புரிந்தது. ஏனென்றால் நான் சென்னைக்கு மாற்றலாகிப் போகிறேன் என்பதை அவளிடம் சொன்னேன். அவள் திடிரென்று தனது விரலில் இருந்த ஒரு ஐம்பொன் மோதிரத்தை எடுத்து என்னிடம் தந்தாள். இந்த மோதிரம், கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற தர்மஸ்தலா ஆலயத்தின், லிங்கத் தோற்றத்தை கொண்ட