பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சு. சமுத்திரம் ☐

இப்போதும் நான் அதை நினைத்துக் கொள்வேன்.

காக்கைச் சிறகினிலே...

பெங்களூரில் காலையில் உலவச் செல்வதே ஒரு அலாதி இன்பம், அழகான கட்டிடங்கள், தூய்மையான தெருக்கள். சிநேக பாவமுள்ள மக்கள். பொதுவாக ஒரு பெண் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தனித்துச் செல்லமுடியும். பெண் தனியாகப் போகிறாள் என்பதற்காக சென்னை நகரத்தைப் போல் அங்கே யாரும் தொடர்வதில்லை. சிவாஜி நகரில் இருந்த நான், எம்.ஜி.ரோட்டிற்கு (எம்.ஜி. ரோடு என்பது நமது சென்னை நகர அண்ணாசாலை மாதிரி அதாவது மகாத்மா காந்தி ரோடு. பலருக்கு மகாத்மாவின் நினைவிலான சாலை என்பது தெரியாது. வெறுமனே எம்.ஜி. ரோடு தான்.) இந்தப் பகுதியில் நான் ‘காலை வாக்கிங்’ போனபோது, ஒரு பெரிய மைதானத்தில் அடர்ந்த மரங்களுக்கு இடையே காகங்கள் கூச்சலிட்டன. கிட்டே போய் பார்த்தேன்; ஒரு காகக்குஞ்சு, கீழே விழுந்துக் கிடந்தது. அது தத்தி தத்தி துள்ளியதும், பறக்க முடியாமல் அவதிப்பட்டதும், பெரிய காகங்களைப் பரிதாபமாக பார்த்ததும், என் நெஞ்சைப் பிழிந்தது. அந்தக் குஞ்சை எடுத்து, மரத்தில் வைக்கலாம் என்று போனேன். ஆனால், கத்திக் கொண்டிருந்த காகங்கள் என்னைத் தாக்கத் தொடங்கின. இதற்கு இடையே, இரண்டு மூன்று நாய்கள் அந்தப் பக்கமாக வந்தன. நான் அவற்றிடமிருந்து அந்தக் குஞ்சை காப்பதற்காக இரண்டு கல்களை கைகளில் வைத்துக் கொண்டு நின்றேன். எம்.ஜி. ரோடு வழியாக போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களும், சைக்கிள்களும்