பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

93

உடனே நின்றன. என்னையும், என் கையில் இருந்த கற்களையும் மாறி மாறிப் பார்த்தனர். பைத்தியும் பிடித்த நான் கல் எறிவேன் என்று பயந்ததுபோல் சிலர் ஒதுங்கி நின்றபடியே என்னை வேடிக்கை பார்த்தார்கள். தற்செயலாக அந்தப்பக்கம் பார்த்த நான் நிலமையைப் புரிந்து கொண்டேன். கற்களைப் போட்டுவிட்டு, அசல் பைத்தியம் போலவே ஓடினேன். நல்லவேளை பைத்தியம் என்று என்னை யாரும் விரட்டிப் பிடிக்கவில்லை. இதேபோல், சென்னையில் பெசன்ட் நகரில் ஒரு காகக்குஞ்சிற்கு இத்தகைய நிலமை ஏற்பட்டது. இங்கேயும் அதைக் காப்பாற்றப் போன என்னை காகங்கள் தாக்கின. ஆனாலும், நான் இரவு பத்து மணி வரை, கையில் கல் ஆயுதங்களுடன் அந்தக் குஞ்சை, பூனையோ, நாயோ நெருங்க விடாமல் காவல் காத்தேன். மறுநாள் காலையில் அலுவலகம் போகும்போது, வழியில் அந்தக் குஞ்சை காணவில்லை. சற்றுத் தொலைவில் அதன் இறக்கைகளும், நகப் பகுதிகளும் கிடந்தன. புரிந்து கொண்டேன். நெஞ்சு கனத்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பின்னணியில் “காக்கை சிறகினிலே” என்ற சிறுகதையை எழுதினேன். கலைமகள் பொங்கல் மலருக்காக எழுதப்பட்ட கதை. இது பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுகதை தொகுப்பில் ஒரு கதையாக இடம் பெற்றது.

தாயாகி... மகளாகி - குப்பைத் தொட்டி

வட கர்நாடகத்தில், அத்தனி என்ற இடம்; இது பம்பாய் கலாச்சாரத்தை உள்ளடக்கிய பகுதி - இங்கே தேவதாசி திட்டத்திற்கு எதிராக போர் தொடுத்தோம்.