பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பிரிந்த நேரத்தில், அப்பொழுதிருந்த புலவர்கள் கண்ணகியின் பிரிவை குறித்து கோவலனிடத்தில் சொல்லவில்லை! சொல்லத் தெரியாது என்பதல்ல, காரணம்! கூட்டு வாழ்க்கை அதிகமில்லாத நேரம் அது! இப்போது சொல்லப் போவது சிலப்பதிகார கண்ணகி அல்ல: ஒரு வள்ளலின் மனைவி கண்ணகி என்று பெயர்!

அந்த வள்ளல் தன் மனைவியை விட்டுப் பிரிந்து காதல் கிழத்தியின் இல்லத்திலே இருந்தான். கண்களிலே கண்ணீர் கலங்க, சோக சித்திரமாய் இருந்த அவன் மனைவியின் நிலையைக் கண்டு இரண்டு புலவர்கள், அந்த வள்ளலிடத்திலே எடுத்துச் சொல்லச் சென்றார்கள்.

'உன் மனைவி கண்ணீர் விட்டு கலங்குகின்றாள்' என்பதை நேரடியாக எடுத்துச் சொல்ல மனமில்லாது— உன் இல்லத்தின் பக்கம் சென்றேன். ஒரு மயில் கண்ணீர் விட்டு, கலங்கிய வண்ணம் நின்றிருந்தாள். அது நின் மனையாட்டிதானா என்று கேட்டார்களாம்! நேரடியாகச் சொல்லாமல் புலவர்கள், உட்கருத்தாக வைத்துச் சொன்னார்கள்!

இப்போது பொது சிந்தனை வளர்ந்து விட்டது! தனிப்பட்டவர்கள் அறிந்ததை, தனிப்பட்டவர்களுக்கு அறிவிக்கின்ற முறை கடந்து, அறிந்த உண்மைகளை உலகறிய, மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார்கள்.

இப்போதுள்ள சமுதாயத்தின் நடவடிக்கையை பார்க்கிற போது, நீதி குறைந்திருக்கிறது—பலரை வற்புறுத்தும் தன்மை அதிகமாயிருக்கிறது.

ஏழை அழுகிறான் என்றால், அவனைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்று கேட்டு, அவன் துயரைத் துடைக்கிறோம். ஏன்?

சேற்றிலே பசு அழுந்திக்கிடக்கிறது. வெளியே வர முடியாமல் தவிக்கிறது என்றால், பேசும் சக்தியற்ற உயிர்ப்