பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பிராணி துன்பப்படுவதை நீக்க வேண்டுமென்று எண்ணுவதில்லை. காரணம், மனிதன் உதவியைப் பெற்று மகிழ்கிறான். கொடுப்பதால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்; வாங்குவதால் அந்த ஏழை மகிழ்ச்சியடைகிறான். அந்த மகிழ்ச்சியை நாம் காணுகின்ற போது—உதவி செய்த பலன் நமக்கு கிடைத்தது என்று, நாமும் மகிழ்கிறோம்!

அந்தக் காலத்தில் தன்னைப் பற்றி பாடிக் கொண்ட புலவர்கள் தான் அதிகம் பேர் இருந்திருக்கின்றனர். புலவர்கள், கஷ்டப்பட்டு மக்களுக்கு அறிவுறுத்தவில்லை.

மன்னர்களின் உதவியை பெறுவதற்காக மண்டியிட்டுக் கிடந்தவர்களும் அன்று இருந்தார்கள்! அற நிலையை காப்பாற்றுவதற்கும் புலவர்கள் இருந்தார்கள் ! மன்னர்கள் அறவழியிலே இருந்து தவறுகின்ற நேரத்தில் அஞ்சாமல் எதையும் சொல்லும் ஆற்றல் படைத்தவர்களும் அன்று இருந்தார்கள்.

வாழ்க்கைப் படிப்பினை நன்கு உணர்ந்தவர்கள் இருந்தார்கள். அதுவும் உண்மை! தரணி மெச்ச வாழ்ந்தார்கள் என்பது உண்மை!

தமிழர்களின் வாழ்க்கை பிற்காலத்தில் எப்படி மாறியது? இப்போது எப்படி இருக்கிறது? டாக்டர் அவர்கள் பேசுகையில் நல்ல வாழ்க்கை வாழுங்கள். இலக்கியம் தோன்றும் என்று குறிப்பிட்டார்!

வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைப்பதுதான் வாழ்க்கை!

ஆனால் இன்று பத்து பேர் கெட்டால்தான், தன் வாழ்க்கை செம்மை பெறும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது! அந்த வழியிலே தான் சமூக அமைப்பும் இருக்கிறது—பொருளாதார நிலையும் இருக்கிறது.

இயற்கை துணை நின்று, உழைப்பை உறுதுணையாக்கி, அறிவுத் துணையோடு உழைக்கின்ற உழைப்பு