பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கொண்டிருந்ததால் தான் சிறந்து விளங்கிய வாழ்க்கையின் தரம் குறைந்தது! ஆகவே தான் அந்தக் காலத்தில் பெரும்பாலும் கடவுட் கதைகளாகவே இயற்றப்பட்டன!

ஆனால் திருமூலர் என்னும் புலவர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடினார். இலக்கிய தமிழர் சமுதாயம் பேதமற்ற, வேற்றுமையற்ற சமுதாயமாக, சுரண்டலற்ற சமுதாயமாக விளங்கி யிருக்கிறது!

எப்படியாவது வாழ வேண்டும், வாழ்வதற்கு இன்னின்னது தேவை என்ற எண்ணம் இப்போது தோன்றி விட்டதால்தான் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அற்றுப் போய் விட்டது!

பழந்தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவதால் பழந்தமிழர்கள் போல் இன்று வாழ இயலுமா? அன்றிருந்த பழந்தமிழர்கள் வேட்டையாடச் சென்றார்கள்—அப்போது ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட வாழ்க்கையை இப்போது வாழச் சொல்லுகிறீர்களே. இது அறிவுடையாகுமா என்று சிலர் பேசுகிறார்கள்.

இப்படி இப்படி யெல்லாம் பழந்தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது, மக்களுக்கு அறிவூட்டி, அவர்கள் வாழ்ந்த செம்மையான வாழ்வை நாமும் வாழ் வேண்டும் என்பதற்காகத் தான் வலியுறுத்துகிறார்கள்.

அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள். இன்று போல் இல்லை. சிகை வளர்ந்திருந்தது! இன்று எல்லோரும் கிராப்பை எடுத்து விட்டு, சிகை வளர்த்துக்கொள்ள முடியுமா?

அன்று, சட்டை போடாமல், இருந்தார்கள். அகன்ற மார்பு காட்டி, போர்களத்திற்கு செல்லும் வீரர்கள் போல் நடை போட்டார்கள். இன்று அப்படி இருக்க முடியுமா?