பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அன்று வாழ்ந்தவர்களின் இடுப்பிலே எப்போதும் உடை வாளை வைத்துக் கொண்டிருந்தார்கள். வீரத்தோல் ஒன்றியவர்களாக அன்று வாழ்ந்தவர்கள் இருந்தார்கள்? தேவையற்ற காரியங்கள் அன்று நடைபெற்றிருக்கின்றன. ஆகவே அவைகள் அப்படியே இன்றும் இருக்க வேண்டுமென்பதல்ல! அன்று வாழ்ந்தவர்களின் அடிப்படைக் கொள்கைகளைத் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர புறத் தோற்றம் முக்கியமல்ல! ஆகவே தான் அன்று வாழ்ந்த புலவர்கள் அகம்—புறம் என்று பாடினார்கள். அகத்திலே இருப்பதை புறத்திலே பார்க்க முடியாது! பழந்தமிழர்களின் அடிப்படை கருத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

அந்தக் காலத்திலே வாழ்ந்த ஆடவன், இல்லக்கிழத்தி என்றும், காமக் கிழத்தி என்றும்,பரத்தை என்றும் மூன்று பெண்களை வைத்திருந்தான். அந்தக்கால இலக்கியமும் இலக்கணமும் இதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். இது இப்போது இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? இந்தக் காலத்தில் ஒரே பெண்ணோடு தான், எத்தனை ஆண்டுகளானாலும் அவளோடு வாழவேண்டும்.

"கள் குடிப்பது தீது என்று சொல்லப்படுகிறது" பழந்தமிழர்கள் குடிப்பதையே பெரிய கலையாகக் கொண்டிருந்தனர். இதற்கு சான்றுகள், சங்க இலக்கியங்களிலே ஏராளமாக இருக்கின்றன!

சங்க இலக்கியத்திலே கள் குடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டு குடிக்கச் சென்று விடுவது, தவறு. அதுவல்ல இலக்கிய வாழ்க்கை! மற்றவர்களை கெடுக்கக் கூடாது. உழைத்து பிழைக்க வேண்டும் இதைத் தான் நல்ல வாழ்க்கை என்று சொல்ல முடியும்! ஆகையால் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்? இலக்கியத்திலே இருந்து எந்த விதமான கருத்தை எடுத்துக்