பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கொள்ளலாம் என்று ஆராய்ந்து பார்த்து, அந்தக் கருத்தினை மனதிலே கொண்டு, அதனுடைய துணையால் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி வாழ்ந்தால் தான் இலக்கியத்திற்கு மதிப்பு கொடுப்பதாகும். அன்று வாழ்ந்த தமிழர்களின் புகழுக்கு ஏற்றமளிப்பது போலாகும்!

தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்று கூறினால் சிக்கல் வரும் என்று கூறுகிறார்கள்! தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்! நீதிபதி அவர்கள் வழக்கு மன்றத்தில் தமிழிலேயே தீர்ப்பு எழுதி படிக்கவேண்டும்—அந்த நாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

டாக்டர் அவர்கள், தனித் தமிழ் வேண்டுமென்று கூறினார்! இப்போது இருக்கின்ற துரைத்தனத்தில் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆள்கிறார்கள். தனித்தமிழ் ஆட்சியிலே நிலைக்க வேண்டுமென்று சொல்லி வருவது கண்டு வெட்கப்படுகிறேன்! வேறு நாடுகளிலே இது போன்ற நிலை இல்லை!

ஆங்கிலம் பேச எழுதத் தெரியாக பல நாடுகளில் அந்த நாட்டின் தாய் மொழியே ஆட்சி மொழியாக இருக்கின்றன. ஆங்கிலம் வளர்ந்திருக்கும் பல நாடுகளில் கூட அந்தந்த நாட்டின் தாய் மொழியைத் தான் ஆட்சி மொழியாக்கி இருக்கிறார்கள். எஸ்கிமோக்கள் வாழ்கின்ற பகுதியிலே கூட அவர்களின் தாய் மொழி தான் ஆட்சியிலே இருக்கிறது. அவர்களை பார்த்து, அவர்கள் வழி, பின்பற்றினால் பாதி பிரச்னை தீர்ந்துவிடும் இங்கே இருக்கின்ற துரைத்தனத்தாரை, 'தமிழிலே எழுதுகிறோம் அனுமதி தாருங்கள்', என்று கேட்கும் நிலைக்கு இருக்கிறோம்!

தமிழர்கள் என்றால் வாதாடலாம்—பகைவர்கள் என்றால் துச்சம் என மதிக்கலாம்! ‘என் கொடியின் கீழ் நீ நிற்கிறாய், நீ சொன்னால் அதை நிறைவேற்ற வேண்டுமா? இப்போது இருப்பதை உன்னால் மாற்ற இயலாது"