பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

என்று சொல்லுவதைப்போல் இங்கே இருக்கின்ற துரைத்தனத்தார் தமிழை ஆட்சி மொழியாக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆங்கிலம் தான் இன்று வழக்கிலே இருக்கின்றன! பேசத் தெரிந்தவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். பாடத் தெரிந்தவர்கள் வடமொழி சங்கீதத்தைப் பாடுகின்றார்கள். ஆகவே மொழி உரிமையை இழந்து விட்டு இன்னொரு இனம் சும்மா இருக்காது!

சின்னஞ் சிறிய நாடு—அயர்லாந்து! ஆங்கிலேயர்களின் ஆட்சியிலே இருந்த காலம்! சுயாட்சி பெற வேண்டுமென்ற எண்ணம் பிறந்து, விடுதலைக்கொள்கை வித்தூண்றிய காலத்தில், முதலில் தோன்றியது புரட்சிக் கழகமல்ல! ஐரிஷ் மொழியை வளர்க்கும் கழகங்கள் தான் முதலிலே தோன்றின!

ஐரிஷ் மொழி பேசுகின்றவர்களே, ஐரிஷ் மொழியிலே என்ன இருக்கிறது. இலக்கியம் இருக்கிறதா என்றார்கள். மொழி உணர்ச்சிக் கொண்டவர்கள் ‘ஆங்கிலத்திலே இலக்கியம் இருக்கலாம், ஐரிஷ் மொழியிலே இயக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உரிமை உணர்ச்சி கிடைக்கும் என்றார்கள். மொழி உணர்ச்சி வலுப்பெற்ற போது ஆங்கில துரைத்தனத்தார், உங்களுக்கு ஐரிஷ் கொடி வேண்டுமா, எங்களது, ஆனந்த வாழ்வு வேண் டுமா, என்று கேட்டபோது விடுதலை தலைவன் டிவேலரா. அடிமை வாழ்வில் கிடைக்கும் ஆனந்தம் தேவை இல்லை. எங்களுக்கு ஐரிஷ் கொடி தான் வேண்டுமென்றார். அதே போல் தான் நாம், நமது மொழி ஆட்சி மொழியிலே இருக்க வேண்டு மென்று விரும்புகிறோம். தனித் தமிழ் வேண்டுமா என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் துரைத் தனத்தாருக்கு நாம் சொல்லும் பதில், புருவத்தை நெறிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

தமிழ் இப்போது வேகமாக முன்புள்ள நிலையை அடைவதற்கு வழிவகைகள் ஏற்பட்டு வருகின்றன. பிற