பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மொழி கலப்பு மாறி, தனித் தமிழ் பேச்சு வழக்கில் நிறைய வந்து கொண்டிருக்கின்றது.

நான் மட்டும் இப்போது நல்ல தமிழ் பேசவில்லை. இப்போது பலர் நல்ல தமிழிலே பேசிவருகிறார்கள். திரைத் தமிழ் வளர்கிறது என்று டாக்டர் அவர்கள் கூறினார்கள்.

உண்மையிலேயே திரைத் தமிழ் வளர்ந்து கொண்டு தான் வருகின்றது. படத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் காதலனும் காதலியும் சந்தித்து உரையாடுகின்ற கட்டமானால், காதலி- காதலனைப் பார்த்து 'சுவாமி' என்று வசனம் பேசுவாள்! இன்று சுவாமி' என்று 'பேசினால், பார்ப்பவர்கள் இது என்ன கோயில் 'சீனா' என்பார்கள்! இது எப்படி மறைந்தது? எப்படி இருந்தது—இப்போது எப்படி மாறிற்று? இன்று கண்ணாளா கரும்பே,தேனே, மானே, வெண்ணிலவே என்று பேசுகிறார்கள். இந்த அழகிய தமிழ் எப்படி வந்தது?

'சுவாமி' என்று பேசினால் தொழுகையிலே பேசுகின்ற பேச்சாகி விட்டது! ஆண்டவனை தொழுதாலும், வரம் தரா விட்டாலும் கோபிக்காமலாவது இருக்கலாம்! ஆகவே இன்று திரையில் அன்பே, ஆரூயிரே என்ற அழகிய தமிழ், பழந்தமிழ் பேசப்படுகிறது!

ஒரு திங்களுக்கு முன் துரைத்தனத்தார் கூட்டிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில் 'பேரூர்தி நிலையம்' என்று ஒருவர் பேசும் போது கூறினார். உடனே ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்திருந்து பேரூர்தி நிலையம் என்பது—இது என்ன தமிழா? இது யாருடைய வாயில் நுழையும் என்று கூறினார். நான் பேசுகிற போது குறிப்பிட்டேன் இது நுழைகின்ற வாய் நிறைய இருக்கின்றன என்று.

நான் படித்த காலத்தில் தீபஸ்தம்பம் என்று சொல்லுகிற போது, அதிலே எத்தனை கம்பீரமாக இருந்தது! அதை