பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இல்லையென்று கூறுகின்றவர்களுக்கு இருக்கிறதென்று காட்ட துணிந்தால் நிச்சயமாக தமிழ் தணித்து இயங்கும். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்று கூறுகிற போது தமிழ் செல்வாக்கு இழந்து விடும் என்று ஆட்சியாளர்கள் கூறுவதற்கு காரணம், தமிழ் ஆட்சி மொழியானால், இப்போது இருக்கிற வடமொழி செத்து விடும் என்ற அச்சம் தான். தமிழ் கெட்டு விடும், கெட்டு விடும் என்று கூறுவதற்கு காரணம்! இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்று சொல்லுவேன்—வடமொழி இப்போது பேச்சு வழக்கிலே இல்லை. லத்தீன் மொழி எழுத்திலே இருக்கிறதே தவிர, பேச்சில் இல்லை. வடமொழிச் சொற்களில் கருத்து இருக்கலாம், ஆனால் அது பெரும்பான்மையாரால், பேசப்படுவதில்லை. பேச்சு வழக்கிலே இல்லை.

தமிழ் மொழியில் நல்ல இலக்கியங்கள் இருக்கின்றன. தமிழர், தாய்மொழி-தமிழ் என்ற நம்பிக்கை, உறுதிப்பாடு உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த உணர்வு இல்லாத காரணத்தினால் தான் இருப்பதை விரட்டப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் கெட்டு விடும் என்று அச்சுறுத்துகிறார்கள்.

எந்த மொழியிலிருந்தும் கடன்வாங்கும் நிலையிலே தமிழ் இல்லை. எப்படி துரைத்தனத்தார் மற்ற நாடுகளிலே இருந்து கடன் பெறுவதைப் போல், மற்ற மொழிகளிலே இருந்து கடன் வாங்கப்பட்டால், அந்த நிபந்தனை ஆதிக்கம்—நம் மொழியின் வளர்ச்சியை குலைத்துவிடும்! எனவேதான் நாம் தனித் தமிழ் வேண்டு மென்று குறிப்பிடுகிறோம்.

மொழி வளம், தனித் தன்மை தமிழர்க்கு இருக்கிறது. தமிழ் இலக்கியம், வாழ்க்கையோடு ஒட்டி நன்மை செய்வதை நீங்கள் பார்க்கக் கூடும். செம்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக, இலக்கியத்தில் உருட்டி திரட்டி எடுத்ததுபோல் குறள் இருக்கிறது.