பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பேசிவந்த காலமும் இருக்கத்தான் இருந்தது? சமூகத்திலும் இப்படிப்பட்ட பலதாரத் திருமணத்திற்குச் சம்மதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆசைக்கு ஒரு மனைவி, சொத்துக்கு ஒரு மனைவி, சுகத்திற்கு வேறொருத்தி, போகிற இடத்தில் வேறொருத்தி, பெருமைக்கு மற்றொருத்தி என்ற முறையிலே ஒரே ஆண், பல மனைவியரை மணந்துவந்த முறையினை நாம்தான் தகாது எனக் கூறினோம். முறையல்ல வென்று கண்டித்தோம்.

பல பெண்களை ஒரு ஆண் மணந்து கொள்வதினால் எவ்வளவு கேடுகள் விளைந்தன! எத்தனை பெண்கள் கணவனை கட்டிய பிறகு, கணவன் முகத்தைக்கூட பார்க்க முடியாத பயங்கர நிலைமையில் தத்தளித்தனர்? எத்தனை குடும்பங்களில் கண்ணீர் வெள்ளம் புரண்டோடியது.

இந்தக் கொடுமையைக் களையவேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணக்கவேண்டுமே தவிர, இஷ்டம் போல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணப்பேன் என்று நடப்பது அநாகரீகம் என்று நாம் கண்டித்தோம். அதன் பலனை இன்று காண்கிறோம்!

இன்று சட்டப்படி ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் மணந்துகொள்ள முடியும். ஒரு மனைவி உள்ளபோது. மற்றொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டப்படி செல்லுபடியாகாது. இதோடு இரண்டாவது மனைவியை மணந்துகொள்ளும் ஆணுக்கும் அவனுக்குப் பெண் தரும் பெண் வீட்டாருக்கும் சட்டப்படி பல வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பல மனைவியரை நான் மணப்பேன். என்னைத் தடுப்பவர் யார், என்று ஆண்மகன் பேசிவந்த காலம் போய் விட்டது. ஆணுக்கு என்ன, எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். 'ஆண்டவனே பல மனைவியை மணந்துள்ளாரே' என்று பேசிவந்த வைதீகர்களின்