பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

சென்னையில் ஒரு பகுதிக்கு 'சூளை' என்று பெயரிடப்படுகிறது. இங்கிருந்து இதுவரை சூளை என்பதற்குக் குறிப்பிட்ட நிர்ணயம் இருக்கிறது. புரசைவாக்கம் என்பது அங்கேயிருந்து அதுவரையில் பகுதிகள் என்பதற்கு அத்தாட்சியான வரம்பு கூறப்படுகிறது! ஒரு ரூபாய் என்றால் 16 அணா என்று ஒரு திட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வீசை என்பது 40 பலம் கொண்டது என்று ஒரு நிர்ணயம் உண்டு. ஒரு கஜம் என்றால் இத்தனை அடி அல்லது இத்தனை முழம் என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

இதைப்போலவே அந்தக்காலம் அந்தக்காலம் என்று பேசிவரும் பெரியவர்கள் 'அந்தக்காலம்' எதிலிருந்து எது வரை அந்தக்காலம்? அவர்கள் எடுத்துக் காட்டிக் கூறும் காலம் எது? என்பதற்கு ஒரு நிர்ணயம் கூறட்டுமே! கூற முடியுமா அவர்களால்? என்னுடைய மகன் இன்று பத்தாவது வகுப்பில் படிக்கிறான். அவன் படிப்பில் ஏதாவது தவறுகள் செய்யும்போது நான் கூறுகிறேன். 'இதெல்லாம் என்ன படிப்படா ? இதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அந்தக் காலத்தில் நான் படித்தபோது——?' என்று பேசுகிறேன்.

நான் குறிப்பிடும் 'அந்தக் காலத்தையா'யா இந்த வைதீகப் பெரியவர்கள் அந்தக்காலம் என்று பேசுகிறார்கள்?

நான் சிறுவனாக இருந்தபோது நான் என்னுடைய மகனைப் பார்த்து கேட்டதைப் போலவே என்னுடைய தந்தை என்னைப் பார்த்து கேட்டார், நீ படிப்பது என்னடா படிப்பு. அந்தக் காலத்தில் நாங்கள் படித்த படிப்பு என்ன அருமையானது தெரியுமா? என்று இதைப்போலவே எனது தகப்பனாரைப் பார்த்த அவருடைய தகப்பனார், அதாவது என் பாட்டனார் இதே முறையில்தான் கேட்டார். என்னுடைய பாட்டனாரின் தகப்பனார்கூட, எனது பாட்டனாரைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் படிப்பதற்கு