பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அந்தக்காலம் போலவே இந்தக்காலத்திலும் நடக்கத் தான் வேண்டுமென்றாலும், காஞ்சீபுரத்திலுள்ள நான் இந்தத் திருமணத்திற்கு வர வேண்டுமானால், நான்கு நாள் முன்னதாகவல்லவா புறப்பட்டு இருக்கவேண்டும். கட்டுச் சோறு கட்டிக்கொண்டு கட்டை வண்டியில் பிரயாணம் செய்ய வேண்டும். அல்லது கால் நடையாக காடு மேடு சுற்றித்தானே வந்தாகவேண்டும். ஆனால் இன்று அப்படி நடக்க முடியுமா? அல்லது நடப்பது தான் நல்லதா?

இராமன் காலந்தான் அந்தக்காலம் என்று முடிவு கட்டினால் அந்த நளைப்போலவே இந்த நாளிலும் வாழ முடியுமா? வாழத்தான் வேண்டுமென்றாலும் முடியுமா? இராமர் காலத்தை நல்ல காலம் என்று போற்றிப் புகழ்பவர்களால் கூட அப்படி வாழ முடியாதே!

இராமர் காலத்தில் இரயில் கிடையாது. ஆகவே இரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத இரயிலில் நாம் ஏறுவதா? என்று இரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள். இருக்க முடியும். இராமர் காலத்தில் இல்லாத ரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப்போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராஜா காலத்தில் தபால் கார்டு இல்லை; தந்தி கிடையாது என்றா தள்ளி விடுகிறார்கள்? கிடையாதே!

எனவே அந்தக்காலம் அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதம் செய்வதும் பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக்காலத்துப் பழக்கமானாலும் சரி; அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா, வாழ்க்கைக்குத் தேவை