பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

யானது தானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்றவேண்டுமே தவிர; அந்தக்காலத்துப்பு பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக்கொண்டு எதையும் அர்த்த மற்றும், பொருத்தமில்லாமலும் பின்பற்றக் கூடாது. உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துள்ளன. இந்நாடு மட்டுமே தான் எல்லாத் துறைகளிலும் பழம் பெருமை பேசிக்கொண்டும், அந்தக்காலம் என்று கூறிக் கொண்டும் முன்னேறாமல் பின் தங்கிக்கிடக்கிறது. நாமும் மற்ற நாடுகளைப் போலவே எல்லாத்துறைகளிலும் முன்னேறியாக வேண்டும். நாம் அறிவுத் துறையில் முன்னேறியாக வேண்டும்.

நாம் அறிவுத் துறையில் முன்னேற்றமடைந்தால் தான் நம்மிடமுள்ள பழமைத் கருத்துக்கள் அகலும், பாசி பிடித்துப்போன கண்மூடி பழக்கங்களும் தொலையும். மத மூட நம்பிக்கைகள் முறியடிக்கப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.

இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொள்வதும், சீர்திருத்தத் திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில் நாம் முன்னேறுவதற்கான அடிப்படைகளில் முக்கியமானதாகும். சீர்திருத்தம் திருமணத்திலிருந்து துவங்குவது, வாழ்வில் நல்லதொரு நிகழ்ச்சியாகும். எனவே இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை யென்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். உலகம் அறிவுத்துறையில் எவ்வளவோ முன்னேறி யிருந்துங்கூட இந்நாடு மட்டும் உலக முன்னேற்றத்துடன் ஒட்டி முன்னேறாது பழமையிலே பெருமைகண்டு பின்தங்கிக் கிடக்கிறது என்று குறிப்பிட்டேன்.

இதனை நம் நாட்டில் தினமும் காணும் காட்சிகளிலிருந்தே காணலாம். அண்மையில் வடநாட்டில் நடந்த கும்பமேளா என்ற விழா எதைக் குறிக்கிறது? அதில்