பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மறுமலர்ச்சி

"பிடி சாபம்"

"ஏன் ஸ்வாமி! என்ன அபசாரம் செய்துவிட்டேன்?"

அபசாரம் செய்யவில்லையா? உனக்கு விசேஷ ஆணவம் பிடித்துவிட்டது. எதற்கும் எப்போதும், தமிழ்! தமிழ்!! என்று கூவுகிறாய். தமிழில் பேசு; தனித்தமிழைத் தேடு; தமிழிலே எழுது; தமிழில் பாடு என்று கிளர்ச்சிகள் செய்கிறாய். தமிழர் நாகரிகம் தமிழர் நிலை என்று பேசுகிறாய். தமிழ்நாடு என்றும் கேட்கிறாய். உன் தொல்லை வளர்ந்து விட்டது"

"இதுவா அபசாரம்? தமிழன் தமிழை, எழுத்தில் எண்ணத்தில், இசையில், காண கேட்க விரும்புகிறான். இது எப்படித் தவறாகும்?"

"தமிழ் இசை ஏன்? இருக்கிற இசை போதாதா? இத்தனைக் காலமாக இருந்துவந்த 'சுஜன ஜீவனா' வும் இனிமை ததும்பும் 'சுனோ சுனோ' வும் இருக்கும்போது தமிழ்ப் பாடல்கள் என்று வேறு ஏன் வேண்டும்?"

"தமிழனுக்குத் தமிழ்ப் பாடல் வேண்டாமோ?"

"தமிழா, நீ இங்ஙனம், எதிலும் தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டே போகிறாய். அது எங்கு கொண்டுபோய்