பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

கச்சேரிகளுக்குச் சென்று திரும்பியவர்கள், இன்னின்ன பாடல்கள் இன்ன ரசத்துடன் பாடப்பட்டன என்பதைப் பேசுவதைவிட, மிருதங்கக்காரரின் உச்சிக் குடுமி இத்தனை முறை அவிழ்ந்துவிட்டது; வித்துவான் மூன்று முறை பால் குடித்தார். பிடில் வாசிப்பவரின் முகம் சில சமயங்களிலே மாருதி வேடமாயிருந்தது என்று இவைகளை அதிகமாகப் பேசுவதைக் கேட்கிறோம். காரணம் அவர்கள் கேட்ட பாடல்களில் பல அவர்களுக்குப் புரிவதில்லை.

பெரும்பாலும், தியாகராஜ கீர்த்தனங்களையே பாடுகிறார்கள். அதில் அடிக்கடி ராமா ராமா என்று வருவதைத் தெரிந்து கொண்டிருப்பார்களே ஒழிய, அதன் கருத்தை அறிந்து கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்க முடியாது. தமிழ் நாட்டிலே தெலுங்கு கீர்த்தனங்களுக்குப் பொருள் விளங்க முடியுமா? ஆந்திர நாட்டிலே 'அரவம்' தெரிகிறதா?

எனவே, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழோடு இசை பாட மறந்தவர்களுக்குத், தமிழ்ப் பாடல்கள் பாட ஓர் சந்தர்ப்பத்தை உண்டாக்கி வைத்தார். நல்லதோர் தொகையை நன்கொடையாக ஒதுக்கி வைத்து, தமிழ்ப் பாடல்கள் இயற்றவும், பாடவும், ஆர்வம் வர, ஒரு வழி கண்டார்; அதற்காக கூடிய சிதம்பரம் மகா நாட்டிலே, இசை வல்லோர் கூடித் தமிழ்ப்பாடல்களே பெரும்பாலும் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இசையில் ஆரியம் புகுந்து இழுக்கு செய்வதைத் தடுக்க, தமிழ்நாடு தமிழ்ப்பாடல் கேட்பதைத் தர, கொடைவள்ளல் ராஜா சர் அவர்கள், செய்த இந்தப் பேருதவிக்குப், பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தமிழரின் எண்ணம் ஈடேறச் செய்வது கண்டு சீறுகின்றனர். தெலுங்குக் கீர்த்தனங்களுக்கும், இந்துஸ்தானி துக்கடாக்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு