பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

அண்ணாமலை நகரில் கூடினோர், மேற்படி கிருதிகள் அழிந்தொழிய வேண்டும் என்று கூறினாரில்லை. அவைகள் உள்ளன. ஆனால், தமிழ் நாட்டிலே, தமிழ் இசை இருக்கட்டும்; இதற்கு ஆதரவு தேடுவோம் என்று கூறினர். இதற்கும் எதிர்ப்பு இருக்கிறதென்றால், பிறகு தமிழகத்துக்குத் தேவையில்லாதவைகளைத் துரத்தும் வேலை, மும்முரமாக நடக்கும் என்பது திண்ணம்.

"சுதேச மித்திரன்" இதுபற்றி எழுதுகையில், நமது சங்கீத வித்வான்கள் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை ஏன் அதிகமாகப் பாடுவதில்லை; கச்சேரிகளைக் கட்டத் தகுந்த போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லாத தோஷந்தான்" என்று எழுதுகிறது.

தமிழ் நாட்டிலே, தமிழர் முன்னால் பாட, போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லை! இதைவிட வெட்கக் கேடான நிலைமை வேறு இருக்க முடியுமா என்று கேட்கிறோம். தமிழனின் தன் மானம் இருக்கும் விதம் இது! அவனது நாட்டில் அவன் மொழியில் பாட்டு இல்லை!

ஜெர்மன் நாட்டிலே ஜெர்மன் மொழியில் பாட்டு உண்டு.

நீக்ரோ நாட்டில் நீக்ரோவின் மொழியில் பாட்டு உண்டு.

வங்காள நாட்டிலே, வங்க மொழியிலே பாட்டு உண்டு.

தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே போதுமான அளவு கச்சேரி களைகட்டத் தகுந்த பாட்டு இல்லை! இது ஏன்? மித்திரன் கூறுமா? என்று கேட்கிறோம். தமிழர் நாடோடிக் கூட்டமா? இல்லை! பழங்குடி மக்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்! தமிழர் அறிவுத் துறையிலே பழக்க மற்றவர்களா? இல்லை. பலப்பல இனத்தார் பக்குவமடையா முன்னம், அறிவுத் துறையில் மேலோங்கி விளங்கியவர்கள்; தமிழர், இசை அறியாதவரா? இல்லை. அவர்களின் மொழியே இயல், இசை, நாடகம் என்ற மூன்று முத்துக்கள் கொண்டது. பின்னர் ஏனையா! தமிழ் நாட்டிலேவார்ப்புரு:எ. தி.ப.5