பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

போதுமான தமிழ்ப் பாட்டுக்கள் இல்லை யென்கிறீர்கள் என்று மித்திரனையும் மற்றையோரையும் கேட்கிறோம்.

குருடன் காணமாட்டான்; செவிடன் கேட்க இயலாது: முடவன் ஓடமாட்டான். அதுபோல், தன்மானத்தைப் பறிகொடுத்த இனம், தன் கலை, தன் மொழி, தன் நிலை குலைந்து தவிக்கும். அத்தகைய நிலை தமிழனுக்கு ஏற்பட்டதால்தான், தமிழிலே பாட்டு இல்லை என்று கூறும் கேவலமான, கொடிய, இழிவான நிலையிலே இருக்க வேண்டி வந்தது. மித்திரன் கூறியுள்ளதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

பண்டைப் பெருமை வாய்ந்த தமிழகத்திலே தமிழில் பாடல்கள் கிடையா. ஆகவே, விழியற்றவனுக்குத் தடி துணையாவதுபோல் வேற்று மொழியிலே, இசை பாடக் கேட்கிறான்.

இந்த நிலைமையை மாற்றி, மற்ற எந்நாட்டிலும் உள்ளது போலத், தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாட்டுக்கள் வளர வழி செய்யத் தமிழ் வள்ளல் முற்படுகிறார். அதை 'மித்திரனும்' அவரது மித்திரர்களும் கெடுக்க முற்படுகின்றனர். அது ஏன்?

ஆரியமித்திரர்கள் எண்ணம் அதுவல்ல! தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் இல்லை. வேறு பாடல்கள் உள்ளன. அதைக்கொண்டு திருப்தி அடையுங்கள் என்பது ஆரியரின் வாதம்.

தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டுமென்றால், தமிழ் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தருவதாகவும், தமிழ்ப் பாடல்களைப் பாடும்படி ஊக்குவிக்க, கழகங்கள் இருந்தால் முடியுமா? வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் முடியுமா? எனவே, அண்ணாமலை நகரில் கூடினோர், சங்கீதக் கழகங்களில் தமிழ்ப்பாட்டுக்களைத்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுக்க