பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

வேண்டும் என்றும், சங்கீத சபைகளில் பெரும்பாலும் தமிழ்ப் பாட்டுக்களையே இயற்றி வித்வான்கள் அவற்றைப் பாடும்படி செய்யவேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

                *              *              *    

இன்று தமிழ்ப் பாடல்கள் இருப்பினும், பாடுவதில்லை. பாடினாலும், கச்சேரியின் கடைசி பாகத்தில் துக்கடாக்களாகவே இருக்கும். பாடகரின் முழுத்திறமையையும், இராக ஆலாபனத்திலும், பல்லவியிலும், கிருதிகளிலும், பாடிக்காட்டி ஓய்ந்த பிறகு, "வித்வாம்சாள்" களித்தான பிறகு, விஷயமறியாத சாதாரண ஜனங்களுக்கு ஏதோ இரண்டொரு சில்லறை உருப்படிகள் பாடுவோம் என்று பாடகர், "சிக்கல் சிங்கார வடிவேலா உனை" என்று பாடுவார். இல்லையேல், "பித்தா பிறை சூடி" என்பார். கச்சேரி முடிகிறது என்பதற்குத் தமிழ்ப் பாடல்களை அறிகுறியாக வைத்துக்கொண்டனர்.

இதற்குக் காரணம், சபை அல்ல! சபையினர் தமிழர். தெலுங்குக் கிருதிகள் அவர்களுக்குப் புரிவதில்லை. வித்வானுடைய அபார திறமையை, சபையிலே பலர் அவருடைய முகத்திலே தோன்றும், பலவித பாவங்களைக் கண்டே துடையில் போட்ட தாளம், அவிழ்ந்த குடுமி நெகிழ்ந்த ஆடை, பக்க வாத்தியக்காரருக்கும் வித்வானுக்கும் நடக்கும் பார்வைகள், கணைப்புக்கள், கண் சிமிட்டல்கள், கால் தட்டுதல் இவைகளின் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முன் வரிசையிலே உள்ள சிலருக்கு வித்வானின் அருமை தெரிந்திருக்கும். ஆனால் சபை, முன் வரிசையோடு முடிந்துவிடுகிறதா!

சபையினர் களிக்க முடியாத—ஏனெனில், தெரிந்து கொள்ள இயலாத—மொழியிலே பாடல்களை, வித்துவான்கள் பாடுவதுதான், "வித்வத் இலட்சணம்" என்ற தப்பு எண்ணம் வளர்க்கப்பட்டு, அத்தகைய பாடல்களைக்