பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கற்றுக் கொடுக்கும் கழகங்களே அதிகரித்து, அத்தகைய பாடல்களையே போற்றும் சங்கீத சபைகள் வளர்ந்ததனால் தான் தமிழ்ப்பாடல்கள் வளரவில்லை. தமிழ்ப் பாடல்கள் அதிகரிக்க வேண்டுமானால், புதுப் பாடல்கள் இயற்றப்பட்டு, அவைகளைக் கற்றுக்கொடுக்க கழகங்கள் உற்சாகத்தோடு முன்வந்து, அத்தகைய பாடல்களைப் பாடும்படி சங்கீத சபைகள் ஊக்குவித்தால்தான் முடியும்.

தமிழிலே, புதுவைக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் இயற்றிப் புத்தகக்கட்டு நிலையத்தில் தங்கினால் பயன் என்ன? பாடகர்கள் அவைகளைப் பயிலவேண்டும்; பாட வேண்டும்.

தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் தேவை என்று கருதுபவர், அண்ணாமலை நகர மாநாட்டார் முயற்சியை எதிர்க்கார். ஆரியர் எதிர்க்காம லிரார்! ஆரியர் எதிர்ப்புப்பற்றி நாம் அஞ்சத் தேவையுமில்லை. தமிழர், தமிழ் இசையை வளர்க்கத் தீர்மானித்து விட்டனர் என்ற செய்தியைத் தமிழர் பொதுக்கூட்டங்கள் கூட்டித் தெரிவித்துவிட்னர். தமிழகம் இந்த முயற்சியில் முழுமனதுடன் ஆதரவு தருகிறது என்பது தெரிந்துவிட்டால், ஆரியர் சுருண்டு விடுவர் என்பதும் திண்ணம். ஆரியத்தைக் காப்பாற்ற அவர் தம் ஆட்சியிலே போலீசும், ராணுவமும், பொக்கிஷமும் பிறவுங் கொண்டும் முயன்றே தோற்ற ஆரியர்கள், விழித்த தமிழன் வெஞ்சினத்துடன் வீறுகொண்டெழுந்தால், என்ன செய்ய இயலும்?

தனித் தமிழ் கேட்டால், மொழிவளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால் சங்கீதக் கலை க்‌ஷீணமடையும் என்று கூறுவர்; தமிழர் அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையுமே என்று கூறுவர்; தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்கு பகருவர். தமிழனுக்குத் தனிநாடு வேண்டும் என்று கேட்டால் பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பசப்புவர், இது அவர்களின்