பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

நாம் காத்திருந்தால், இன்னும் ஐம்பதாண்டு காலம், அறுபதாண்டு காலத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் நமக்கே தோன்றும். கவிஞர் வேகமாக சிந்தித்து, அதை வேகமாக மக்களுக்கு அளித்தார், மக்களும் அதை பலப் பட பாராட்டி, பயனுற்றனர்!

வேகம் தாங்காமல் சில அழிந்துவிடும். இப்போது வீதியிலே உருளை வண்டி போகிறது என்றால், அதை இழுத்துச் செல்பவனின் கண்களுக்கு தெரியாமலேயே சக்கரத்தில் அகப்பட்டு வண்டியின் வேகம் தாங்காமல் சில அழிந்துவிடும். அவைகள் கொலை என்று கருதப்பட்டாலும் அப்படிப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவதுமில்லை — தீர்ப்பு சொல்லுவதுமில்லை! வண்டி இழுப்பவன் வேண்டுமென்றே அதைச் செய்வதில்லை. அழிவை அடிப்படையாக வைத்து புரட்சி எழுவது நீடிக்காது!

மேலும் இலக்கியம் யாருக்காக இருக்கிறது. இலக்கியம் இப்போது எப்படி இருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்?

மரத்தில் பழுத்து இருக்கும் பழுத்த பழத்தை பார்த்ததும் தின்பதற்கு ஆசையிருக்கிறது. பழத்தை எப்படி தின்பது? பகிர்ந்து சாப்பிட போகிறார்களா? இல்லை, பாராமல் எடுத்து தின்னப் போகிறார்களா?

சித்தர்கள்போல் காத்திருந்து—தானாக கனிந்து விழுந்ததும் சாப்பிடப்போகிறார்களா? இலக்கிய வளர்ச்சியை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.

அடிப்படையில் இலக்கியம் யாரால் இயற்றப்பட்டது. அது யாருக்காக இயற்றப்பட்டிருக்கிறது. அது