பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

(Shelly) என்பார். கலியின் கருத்தை வெறும் எழுத்துக் கோவையாகக் கொண்டு நோக்குதல் கூடாது; பலன் தாராது.

ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் போதும்! மான் மந்தையைச் சிறு ஓநாய்க் கூட்டம் விரட்டி யடிக்கும். பாம்பு, படையைக் கலக்கும். ஷெல்லி கூறிய கருத்து இங்குப் பயன் தாராது. கட்டுப்பாடும், உறுதியும், உணர்ச்சியும் கொண்டதாக ஒரு பெருங்கூட்டம் இருப்பின், அதனை ஒரு சிறு கூட்டம் எதிர்த்துப் பயன் இல்லை என்பதே, கவியின் கருத்து.

எண்ணிக்கையைவிட இங்கு இயல்பே முக்கியமாகக் கவனிக்கப்படுதல் வேண்டும்.

தமிழ் இசை இயக்கத்தைப் பெருங் கூட்டம் ஆதரிக்கிறது. சிறிய கும்பலொன்று எதிர்க்கிறது. எதிர்க்கிறது என்றுரைப்பதைவிட எதிர்த்தது என்றுரைத்தால் பொருந்தும் என எண்ணுகிறேம். பல்வேறு கட்சிப் பற்றுடையவர்களும், தமிழினால் ஒன்றாக்கப்பட்டு, ஒரு மனமாகி இந்த கருத்தை வெளியிட்டதைக் கேட்ட பிறகும், தமிழ் இசை இயக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு இருப்பினும், நாங்கள் எதிர்த்தே தீருவோம் என்று கூறும் அளவுக்கு, அந்தச் சிறு கும்பல், அறிவை இழந்து விட்டிருக்கும் என்று நாம் நம்ப மறுக்கிறோம். அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள் தமிழ் இசையைத் தமிழர் ஆதரிக்கின்றனர் என்பதை, எனவே, எதிர்த்துப் பயனில்லை. என்று தீர்மானித்து வீட்டிருப்பர்.

"தமிழ்ப் பாடல்களைச் சில்லறை உருப்படிகள் என்று கூறுகிறார்களே, அந்தக் கெட்டவழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று தோழர் தியாகராஜ பாகவதர் கூறினபோதும், திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள், தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குப் போகாதீர்கள்; தமிழ்ப் பாடல்களைப் பாடாத வித்வான்களை