பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

இனத்திலே பற்றிருக்க வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டிலே. யாவரும் ஒன்றெனும் எண்ணந் தோன்ற வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டு எல்லை குறிக்கப்பட வேண்டும் என்றோர் கிளர்ச்சி.

நாட்டின் செல்வம் நாட்டினருக்குப் பயன்பட வேண்டும் என்று கூறுவது மற்றோர் கிளர்ச்சி.

நாட்டுக்கு, நாட்டினருக்கேற்ற சட்ட திட்டங்கள் அடையவேண்டும் என்று வலியுறுத்த ஓர் கிளர்ச்சி:

இன்னோரன்ன பிற கிளர்ச்சிகள், பல சிற்றருவிகள் கூடி ஆறு ஆவதுபோல், தமிழர் மறுமலர்ச்சியும் பெரியதோர் இயக்க மாதலை, கூர்ந்து நோக்குவோர் காணக் கூடும். தமிழர் அதனைக் கூர்ந்து நோக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் கூர்ந்து நோக்கிப் பார்த்துத்தான் ஒவ்வொரு கிளர்ச்சிக்கும் எதிர்ப்பை உண்டாக்கிப் பார்க்கின்றனர்.

அது ஒரு சிறு கும்பல்! ஆம்! மிகச் சிறு கும்பல்! ஆனால், சப்மெரைன்போல் மறைந்திருந்து தாக்கும் இயல்பு; விஷவாயுபோல், பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல், வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெரியும் வலிமை பெற்றது. இல்லையேல், சிறு கும்பல், பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்!

             *              *                *  

விக்டோரியா மண்டபக் கூட்டத்திலே தோழர் டி. எஸ். சொக்கலிங்கம், தமிழை எதிர்க்கும் சிறு