பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


ஆளும் காலம் கவிழ்ந்து விட்டது' என்று தினமணி 1941 செப்டம்பர் 16-ந் தேதி இதழில் கூறியிருக்கிறது.

கவிழ்ந்துவிட்டதா? உண்மையாகவா? இல்லை! கவிழ்ந்து விட்டிருக்குமே யானால், நாம் பள்ளுப்பாடுவோம்! இன்னமும் கவிழவில்லை. ஆனால் கவிழ்வது மட்டும் உறுதி.

'பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே; வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்றார் பாரதியார். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள், போச்சே என்பதற்குப் பதிலாகப், போச்சே என்று கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. இன்னும் சிறு கும்பல் சீறுகிறது! ஆதிக்கம் செலுத்துகிறது! தமிழரை எதிர்க்கிறது! தமிழரின் மறுமலர்ச்சியை அழிக்கக் கருதுகிறது. ஆம்! ஜார் அடைந்த கதியை அடைந்தும், அந்தச் சிறு கூட்டம் தனது ஆணவத்தை அடக்கிக் கொள்ளத் தான் இல்லை. அதனை அடக்கத் தமிழர் எழுச்சி பெற வேண்டும்.