பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ருக்மணி கல்யாணம்

அதோ! உயர்ந்த உருவம், நீண்ட மீசையும்கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை, அறியாதார், இரார்.

போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத், துரும்புபோல. விடமாட்டார்! திறமையைப் பாராட்டி மெடல்கள்கூட அளிக்கபட்டிருப்பவர்!!

அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்.—அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணியமாட்டார். இலஞ்சம், ஊழல். இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தைவிட, நாளையதினம் இறந்த பிறகு நடக்குமே 'எமதர்மனின் விசாரணை' அதற்காசு மிகவும் அஞ்சுபவர்! நெற்றியில் பளபள வென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை!! "யாராயிருந்தா, நமக்கென்ன சார்? டூட்டின்னா டூட்டிதான்! பணக்காரனாயிருந்தா அவன் வீட்டிலே பலே கில்லாடின்னா, இரண்டு குத்திலே அலறனும்," என்று துணிச்சலோடு சொல்வார். ஆனால். கோயில் குருக்களைக் காணும்போது, போலீஸ் கொப்பியை கழட்டி விட்டு, அவர் கும்பிடத் தவறமாட்டார்! டி.எஸ். பியை விட, அய்யருக்கு போலீஸ் பொன்னுசாமியிடமிருந்து