பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

"அண்ணன் தம்பின்னாகூட விடமாட்டேங்க—முதலிலே கையில் விலங்கைப் பூட்டிடுவேன்"...

"ரொம்ப சரி! ஒரு பெண்டாட்டி இருக்கும்போது, இன்னொரு பெண்டாட்டியைக் கட்டிக்கிறது தப்பு தானே?"

"சட்டப்படி, தப்பு சார்—தப்பு"

"சரி, இது என்ன? பாரும்"

பார்த்தார், பொன்னுசாமி ஏன் விழிக்கிறார் அப்படி? ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க்கொண்டிருக்கிறது? முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை? அப்பப்ப, மிகவும் சோகத்துடனல்லவா காணப்படுகிறார்!

விஷயம் இதுதான் ! பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மணி கலியாணமாம்! விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார், பீமராயர். ருக்மணி என்பது பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ணபரமாத்மாவினுடைய மனைவி ருக்மணிதான்! அந்த ருக்மணிக்கு, மீண்டும் கலியாணம்.

நோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சப் இன்ஸ் பெக்டர்—'என்ன பொன்னுச்சாமி! பாமா இருக்கப்ப, இந்தக் கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா?'

"கிருஷ்ணன்....சாமிங்க"

"சாமி, தப்புதாண்டா செய்யலாமா பொன்னுச்சாமி! சட்டம்னா சட்டம்தானே?

கேட்கிறார், சப்—இன்ஸ்பெக்டர்! விழிக்கிறார் பொன்னுசாமி. பாவம் என்ன பதில் சொல்லுவார், அவர்! எந்தச் சாமிதான், ஒரு மனைவியோடு வாழ்வதாக