பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

இருக்கிறது, நமது புராணத்தில்!! ஊம்....'அரெஸ்டு' செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டுவிடமுடியும்? சிக்கலான விஷயம் தானே! திகைக்கும் பொன்னுச்சாமியால், என்ன பதில் சொல்லமுடியும்! திகைக்கிறார்.

இங்கும் — அங்கும்

"சின்னபொண்ணு! எங்கே உன் அப்பன்?" "அப்பாவை போலீசு கூட்டிகிட்டுப் போச்சு..." "போலீசா1 ஏம்புள்ளே! எதுக்காவ..." "போறாதவேளை பெரியப்பா! வேறே என்ன.... பண்ணையாருக்கு என்னமோ கோவம், அப்பன் தேங்காயைப் பறிச்சு வித்துப் போட்டாருன்னு போலீசுக்குச் சொல்லிப்புட்டாரு......"

"அன்யாயமாயிருக்கே, புள்ளே! முனியன் அப்படிப் பட்டவனில்லை என்கிறது போலீசுக்கே தெரியுமே" "தெரிஞ்சி-பண்ணையார் சொல்றப்போ என்ன செய்வாங்க" “உங்க அண்ணன் எங்கே போயிட்டான்?" "அதுதான் வக்கில் ஐயரு வூட்டுக்கு ஓடி இருக்கு, போலீசிலே இருந்து அப்பனைக் கொண்டார." "உங்க அம்மா....?" "பொன்னியம்மர் கோவுலுக்குப் போயிருக்கு..." "வேண்டிக்கவா" "ஆமாம். உக்காரு பெரியப்பா." "நிக்கவே நேரமில்லே, உக்கார முடியுமாம்மா நம்மாலே. நம்ம வினை அப்படி இருக்குது. போலீசிலே இருந்து உங்க அப்பன் வந்ததும் சொல்லி அனுப்பு, அதுக் குள்ளே நான் தோப்புபக்கம் போயிட்டுவாரேன்."