பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


ஆமாம், ராமாயண காலட்சேபம் நடக்கிறதேன்னோ?

சுப்புப்பாட்டி எங்கே, வளவளன்னு பேசிண்டிருக்குமே...?

சுப்புப் பாட்டிக்கு இப்ப ஏகப்பட்ட கிராக்கின்னா வந்திருக்கு, அமெரிக்கமாதர் சங்கத்திலே இருந்து வந்திருக்காளே, அவாளுக்கு, அப்பளம் போடறது எப்படின்னு பாடம் சொல்லித்தருகிறா பாட்டி.

பலே பலே! நான் வந்தவேளை அப்படி. நேக்கு அவசரமான வேலை...வரட்டுமா...

காப்பி சாப்பிடுங்கோ, மாமா! போடி போ! எல்லோரும் டீ சாப்பிடுங்கோன்னு பிரசாரம் செய்யற இலாகாவுக்கு நான் ஜெனரல் மானேஜராக நியமிக்கப்பட்டிருக்கேன் தெரியுமோ.

நல்ல சான்சுதான்! அது இருக்கு, அதுக்கும் நீர் காப்பி சாப்பிடறதுக்கும் என்ன சம்பந்தம்.

சரி! உன் கைப்பட்டாலே காபி, தேவாம்ருமாயிடுமேன்னோ, கொடு.... தந்துப்பித்துன்னு உளறாதீர் மாமா....... உட்காரும். இதோ ஐஞ்சு நிமிஷத்திலே காப்பி.... போது போகணும்னா அதோ ரேடியோவைத் திருப்பிண்டு இரும், இதோ வந்துட்டேன்.