பக்கம்:எனது நண்பர்கள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  127

போகவில்லையென்பதை அவர் திராவிட முன்னேற்றக் கழகங்கண்டு, கட்சியை வளர்த்து, கழக ஆட்சியைத். தமிழகத்தில் முதலமைச்சராய் இருந்து நடத்தி, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றதைக் கண்டு நன்கறியலாம்.

அவர் முதலில் மாணவர், பின் தொண்டர்; அடுத்துப் பேச்சாளர்; எழுத்தாளர்; நடிகர்; நாடக ஆசிரியர் பத்திரிகை ஆசிரியர்; நூலாசிரியர்; சீர்திருத்தவாதி, அரசியல்வாதி; முதல் அமைச்சர் என ஆனார்.

இவற்றால் முதலில் அவர் காஞ்சித் தலைவன் ஆனார்; அடுத்துத் தமிழகத்தின் தலைவர் ஆனார். பின் டில்லிப் பாராளுமன்றத்திற் பேசி, இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும் தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்.