பக்கம்:எனது நண்பர்கள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14  எனது நண்பர்கள்

அனைத்தையும் அவரது மதுரை நகர் மாளிகையில் கண்டு மலைத்து நின்றவர் பலர். அந்நூல் நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தின் நூல் நிலையம் போன்று. காட்சியளிக்கும். அந்நூல்கள் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கி வைக்கப் பெற்றிருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நூலிலும் அவர் எழுதிவைத்துள்ள அடிக்குறிப்பும் காணப்பெறும். இவற்றினைக் கண்டு வியப்படைந்தோரில் யானும் ஒருவன்.

தமிழறிஞர்கள்

பசுமலை டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களே இவரது தமிழாசிரியர். சிறந்த இலக்கணங்களை சேலம் அ. வரத நஞ்சையபிள்ளை அவர்களிடத்திலும், சைவசமய உண்மைகளை, சித்தாந்தச் செல்வர் ஒளவை. துரைசாமி பிள்ளை அவர்களிடத்தும் கற்றறிந்தவர். மறைமலை அடிகள், திரு. வி. க., எம். எல். பிள்ளை, பண்டிதமணி ஆகியோரிடத்தும் பெரும் பற்றுக் கொண்டவர்.

உள்ளத் துணிவு

வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து காந்தியடிகள் வழியில் நாட்டுப்பற்றுடன் நன்கு உழைத்தவர். அப்படியிருந்தும் 1938–ல் நான் திருச்சியில் நடத்திய தமிழக இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் முதல் முதலாக தமிழ்க்கொடியை ஏற்றிவைத்து, தமிழ் முழக்கம் செய்து இந்தியை மிகத் துணிச்சலோடு எதிர்த்து நின்றவர் தியாகராசர்.

தமிழ்ப்பற்று

தமிழ்நாடு என்ற ஒரு நாளிதழைத் தொடங்க எண்ணி என்னை அதற்கு ஆசிரியராக இருக்க வேண்டினார். நான் என் இயலாமையைத் தெரிவித்ததும், பேராசிரியர் இரத்தினசாமி அவர்களையும், திருவாசக மணி கே. எம். பாலசுப்ரமணியம் அவர்களையும் ஆசிரி-