பக்கம்:எனது நண்பர்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  45

சாமிநாத ஐயர், அரசன் சண்முகனார், ரா.இராகவையங்கார், மு.ரா. கந்தசாமிக்கவிராயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், பா. வே. மாணிக்க நாயக்கர், சுவாமி விபுலானந்தர், நாட்டாரய்யா, நெல்லையப்பக் கவிராயர், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை, கா. சுப்பிர மணியப்பிள்ளை முதலியோர் ஆவர்.

புலவர் தலைவன் பாரதி

இவர்களிடம் பயின்ற மாணவர்களில் பலர் இன்று பெரும் புலவர்களாகவும், பேராசிரியர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களிற் சிலர் தமிழ்த்துறைக்குத் தலைமை வகித்துத் தனித்தனியாகப் பல கல்லூரிகளையும், பல்கலைக் கழகத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள், பூ. ஆலால சுந்தரம் செட்டியார் அ.ச. ஞானசம்பந்தன், வெள்ளை வாரணனார், இராசரத்தினம் அம்மையார், எஸ். இராசாமணி அம்மையார் முதலியோர்.

வாது புரியும் பாரதி

“தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலைப்பற்றி, புலவர் சிலர் மனக்குறையடைந்த செய்தி, இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அவர்கட்கு எட்டியது. அவர் தமது அவைப் புலவராகிய திரு.ரா. இராகவையங்கார் அவர்களை அழைத்து, இது பற்றிப் பாரதியாரோடு வாது புரியலாமா?’ என வினவினார். அய்யங்கார் விரிந்த மனப்பான்மையுடையவர். ஆதலின் அவர் கூறிய விளக்கத்தினால் அது நடைபெறாமற் போயிற்று.

உண்மை கண்ட பாரதி

சேரன் தலைநகராகிய வஞ்சி, திருச்சியை அடுத்துள்ள கரூரே என்று மு. இராகவையங்கார் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்கள். பாரதியார் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/46&oldid=986314" இலிருந்து மீள்விக்கப்பட்டது